Sunday, August 08, 2010

சந்தோஷம் என்பது என்ன ?

8 8 2010

சந்தோஷம் என்பது என்ன ?

1. குழந்தையை மடியில் வைத்திருக்கும் போது அது தன் பிஞ்சு கால்களை அப்படி இப்படி ஆட்டும் போது, அதன் மென்மையான மலர் பாதங்கள் நம் மீது படும் போது ஏற்படும் சிலிர்ப்பா ?

2. 2 (அ) 3 செ. மீ நீளமே உள்ள அதன் பூ விரல்களால் நம் விரல்களை பிடித்துக்கொள்ளும் போது ஏற்படும் உவகையா ?

3. Vijai TV Super Singer 3 ன் selection round ன் முதல் சுற்றிலேயே qualify ஆக முடியாத நம் பாட்டை கேட்டு சொக்கி (!) நம் மடியிலேயே அழகாக தூங்குகிறதே அந்த ஆனந்தமா ?


4. தனக்கு தெரிந்த மொழியில் ஆ, இ, உ என பேசி, தன் தேவையை ( பசியா, தூக்கமா, Jatti ஐ மாற்ற வேண்டுமா ) தெரிவிக்கும் அதன் அறிவை கண்டு வியக்கும் போதா ?

5. குழந்தையை மடியில் வைத்திருக்கும் போது அது நம் மேல் urine போய் விட்டு, ஒரு சிரிப்பு சிரிக்குமே, அந்த கள்ளமில்லா சிரிப்பை காணும் போதா ?

6. அழுது கொண்டிருக்கும் குழந்தையை நாம் தூக்கி கொண்டதும் அதன் அழுகை மறைந்து, நம் support கிடைத்து விட்டது என்ற நிம்மதியில் நம்மை பார்த்து சிரிக்குமே அந்த சிரிப்பிலா ?

7. சமயத்தில் நமக்கு சமமாக பேசி நம்மை திக்குமுக்காட வைக்கும் அதன் திறமையை
காணும் போதா ?


என்னை கேட்டால் , இந்த ஏழுமே மிக பெரிய சந்தோஷம் தான்.

2 comments:

Srini said...

If you think about these 7, that itself gives me a great happiness. If you observe it directly, one can not deny it is real Happiness in life.

Anonymous said...

Rightly said , Vasu. I have had the pleasure of enjoying this happiness six times !!

Sugavanam