Sunday, April 01, 2012

மகா பெரியவா- 17

மகா பெரியவரின் இன்னுமொரு அருள் ( There are lot of spelling mistakes . But I hope you can read it well , as I did )

1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் ெகாண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபேகசன்.பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்க்கை! என்று இருந்த பெரிய பக்தர்.
தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாளை பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையிடம் வந்தார்.

உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா ெபரியவாதான்! எனவே தஞ்சாவூrலும் ஏேதா ெபrயவா ைகங்கர்யம் என்று பண்ணிக் ெகாண்டிருந்தார். பிள்ளையாண்டான் ேகட்டான் " ஏம்பா! உங்களுக்கு எப்ேபாப் பார்த்தாலும் ெபrயவா சேவைதானா? நீங்க படிச்ச படிப்புக்கு, அப்ேபாேவ ஏதாவது சர்கார் உத்திேயாகம் பார்த்துண்டு இருந்தா.........இப்ேபா ெபன்ஷனாவது வந்துண்டிருக்கும்......உங்க ெசலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான். பஞ்சாபேகசன் பதறிப் ேபானார்!! "சிவ சிவா!!" அவருைடய உடல் ஒருமுைற நடுங்கியது. ேபசக் கூட முடியைல. ....."ெபrயவாளுக்கு ைகங்கர்யம் பண்ண குடுத்து ெவச்சிருக்கணும்டா!......ேநக்கு அந்த பாக்யம் ெகடச்சது. அவர் பக்கத்துேலேய இருந்து ைகங்கர்யம் பண்ணிேனன். நான் ஒண்ணு ேகக்கேறன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன ேகட்டுப் ேபாய்ட்ேடள்? எல்லாரும் life ல நன்னாத்தாேன இருக்ேகள்? நமக்ெகல்லாம் என்ன ெகாைற? ெசால்லு.....இப்பிடி ஒரு குைறயும் இல்லாமப் பாத்துக்கறதே என் பெரியவாதாண்டா........" ஆவேசமாகச் சொன்னார்.

"இல்ேலப்பா.......சர்கார் உத்ேயாகம்னா, ெபன்ஷன் வந்திருக்குேமன்னு ஒரு ஆதங்கத்ல ெசான்ேனன்" ைபயன் ேபச்ைச முடித்தான்.

ெகாஞ்சநாள் கழித்து, ஏேதா கார்யமாக காஞ்சிபுரம் ேபானான் மகன். வrைசயில் இவன் முைற வந்ததும்,
"நீபஞ்சாபேகசன் புள்ைளதாேன?" என்றார் ெபrயவா.
"ஆமா........ெபrயவா"
"ஒன் ேதாப்பனார் நன்னா இருக்காரா? என்கிட்ேட அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்rயம், பக்தி ெதrயுேமா? அவர நன்னா .....ெவச்சுக்ேகா! என்ன ெசய்வியா? இந்த மடத்ல ைகங்கர்யம் பண்ணறவாளுக்ெகல்லாம் ெநைறய பண்ணனும்னு எனக்கு ஆைசதான்......ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்ைல. குடுக்கறவா என்ன குடுக்கறாேளா, அத ெவச்சுண்டு இந்த மடத்த நடத்த ேவண்டியிருக்கு. இது "சர்க்கார்" ஆபீஸ் இல்ேலல்லிேயா? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷிைய ப்ரார்த்திச்சுக்கறைதத் தவிர என்னால ேவற என்ன ெசய்ய முடியும்? ஆனா....ஒன் ேதாப்பனார் இந்த மடத்ல பண்ணின ைகங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆைச.. அதுனால மாஸாமாசம் 25 கலம் ெநல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்ேக வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்ேகன்.....'ெபன்ஷன்'......னா!!" என்று முடித்தாேரா இல்ைலேயா, மகன் தடாெலன்று ெபrயவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.

"சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் ேபசிேனேன ஒழிய, அவேராட ைகங்கர்யத்ைதப் பத்தி நான் ெகாைறேய ெசால்லைல பெrயவா....என்ைன மன்னிச்சுடுங்ேகா!"

"ஒன்ைன நான் ெகாைறேய ெசால்லைல........ப்பா ! என்னால ெபருஸா எந்த ஒதவியும் பண்ணமுடியைல...ன்னுதான் இந்த சின்ன ஒத்தாைசக்கு வழி பண்ணிேனன்"

அப்பா பண்ணிய ேசைவைய "ேபாறும்" என்று கூறிய மகன், அது முதல் ெபrயவாளுக்ேக அடிைமயாகி, அவர் ைகங்கர்யேம மூச்சாக வாழ ஆரம்பித்தார்! ெபrயவா அருகில் இருந்து பண்ணும் ேசைவயும் பாக்யம்தான்!

எல்லாரும் அவர் அருகிேலேய இருந்துவிட்டால்............? எப்ேபாதும் நம் உள்ேள இருக்கும் அந்தர்யாமியான மஹா ெபrயவாளுக்கு, ஸத்யம், சகலஜவீ தைய, பக்தி என்றைகங்கர்யத்ைத பண்ணுவதும் பாக்யம்தான்.

மகா பெரியவா- 16

பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை "காங்கேயன்' என்று அழைத்து வழிபடுகிறோம்.

எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே.

ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை "சக்தி சக்தி' என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.

ஓம் முருகா

மகா பெரியவா- 15

‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை!

தேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.

அவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…

சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவா காஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோட அழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.

‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…

‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ,
எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ,
எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ,
எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ,
எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ,
எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ-
அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச்சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன்

மகா பெரியவா- 14

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.

அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.

"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!........ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!....நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"

ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,

"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?........அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா...ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !" என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம்வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால் கூட நினைக்க முடியாது.

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?

வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும்,குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார்.

மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.

மகா பெரியவா- 13

A devotee asked SwamigaL: "Is there greatness in doing atithi bhojana, Swamy?"

SwamigaL replied immediately. "Yes yes! It is a maha puNya dharma that could lead to mokSa! It has benefited a number of people! Only when you ask people like this Gopalan who have experienced it, they will tell you. Such a lofty dharma is this one!"

A devotee got up and prostrated to the sage. He said with humility,"My name is RamaSethu. Tiruvannamalai is my native place. We all pray together to AcharyaL. We desire to listen more elaborately about the greatness of this atithi bhojana in a way we can understand it.
Periyavaa should take mercy on us!"

SwamigaL asked him to be seated. The devotee complied. Everyone was watching the walking God in silence. That parabrahmam started talking after sometime.

"My memory is that it was 1938 or 1939. SriSankara MaTham was doing its administration
from KummoNam (Kumbakonam). I am going to tell (you about) an incident that happened at that time. If you listen to it devotedly, the greatness that lies in this (incident) can be understood! I shall tell you (now), listen (carefully)."

Swamigal stopped for a brief while and then continued: "There was a large house on the western bank of the Kummonam Maamaanga (Mahamaha) kulam. A grocer by name Kumaresan Chettiar was living in that house. I remember very well... The name of his dharma patni was Sivakami Achi. They belonged to Pallathur near Karaikudi. That couple had no children. They had brought a dependable boy from their native place and kept him with them for taking care of the grocery shop.

"At that time, the age of Kumaresan Chettiar was perhaps fifty or fifty-five. That Achi's (age was) perhaps within fifty. At all times only the nama smaraNa 'Shiva Shiva... Shiva Shiva' would be issuing out of the mouth of those two people. There was no other talk! Chettiar had in his house a singlebullock cart. Seating Achi in the cart, Chettiar himself would drive! Every day both them would arrive in their cart at the banks of Kaveri to take bath.

Finishing (their) bath, they would come to our MaTham, prostrate,receive the blessings and go back. They were such an intimate couple. About them, I am going to tell (you now) something that will overshadow all these, look (listen)!"

He took to silence to keep them in suspense for sometime. The devotees were waiting with eager expectations. AcharyaL started speaking again: "You know what work that couple had been doing for many years? To serve and feed the atithis! Don't be surprised! They would entertain
the Shiva disciples with food, every day at noon in the hall of their house, without shrinking a face, whatever the number of disciples they received as guest. They would seat the disciple in the thinnai at the entrance (of their house), wash his feet with water, wipe with a cloth, apply sandal paste and vermillion to them and lead them to the hall and seat them there.

"They did not have any cook in their house! That amma would cook with her own hands, whatever number be the guests of Shiva disciples! Another important thing--if you ask what it is--is that they would inquire from the Shiva disciples the details of the vegetables and dishes they like, go and get them, cook and serve them! Such an elevated mind! Do you think how SwamigaL knew about all these things... There is no sort of secrecy about it. (One Sri) Sundaram Iyer, who was close to the MaTham, was looking after the accounts of Kumaresan Chettiar. Only he would tell me these things when he was free. Understand now?"

AcharyaL stopped for sometime and relaxed. None of the seated moved an inch. They were all looking with fixed eyes at Maha SwamigaL.

That walking God continued: "One day it was raining very well. (It was) noon time. Kumaresan Chettiar came to the entrance (of his house) and looked (here and there). No atithi was in sight! Holding an umbrella, he descended the steps of the Mahamaham pond and surveyed the scene. A Shiva disciple was seated after bath in a small building there, wearing vibhUti (all over his body). Chettiar prayed to him and brought him for dining (at his home). He seemed somewhat like a well- read Shiva disciple. He came singing Thevaaram. Washing his feet, Chettiar led him to his hall and seated him. The couple prostrated to the Shiva disciple.

Chettiar's dharma patni went to the disciple and asked, 'What vegetables are the favourite of Swamy? Please tell me, so I can go to the shop, get and serve them after cooking.' "It seemed that the Shiva disciple was in good hunger. He got up and went to the backyard and
looked around. He saw sprouts of tender spinach there. He came inside, called the mother and said that he needed nothing except the tender spinach in koottu and their stems in sambar and that it would be sufficient for him.

Chettiar went to pluck the spinach with a bamboo plate in his hand. The rain had stopped by then. Since it was becoming late, the Shiva disciple who was very hungry, decided to give a helping hand for plucking the spinach, so he asked for a bamboo plate and went to the
backyard. "Sivakami Achi was standing at the backyard entrance, watching the two men pluck the spinach. Both of them placed their plates inside the house after enough spinach was plucked. You know what that amma did immediately? She washed the two spinach plates separately. She lit two furnaces, kept the spinach in two separate pans on the furnaces and started cooking.

The Shiva disciple who was looking at her act was surprised! He was confused: 'What is this? Both the plates has the same spinach sprouts.Without using a single vessel to cook them why this mother lights two furnaces and cooks them separately?'

"After sometime, that amma took the pans out of the furnaces, took the disciple's spinach only to the puja room and offered it as nivedana to Swami. The disciple who was watching it was pleased with immense pride! Know what he had thought? He decided, 'I am a big Shiva bhakta.
Sannyasi. So this mother has understood that Lord Shiva would accept only the spinach I plucked and offers it as nivedana. Still I would ask the mother herself after my meal about the offering.'"

Stopping here briefly, SwamigaL watched the devotees sitting opposite him.

Nobody lowered a jaw. He continued: "The Shiva disciple, who had finished his dining, asked that Achi about his doubt. You know what reply did the Achi give? (She said 'Ayya, when the spinach was plucked in the backyard, I was watching. My husband chanted the name 'Shiva Shiva...' and plucked the spinach. So it became ShivArpaNa then and there. There was no need to offer it again. You plucked (the spinach) without chanting any name. That is why, I lit a furnace, cooked your spinach separately and offered it to the Lord.' The disciple was embarrassed to hear this.

The couple then prostrated to the disciple. He appreciated the Achi's bhakti and wisdom and started on his way. They were a couple who served annam in such a way..."

AcharyaL stopped. The crowd of devotees was sitting with amazement.Nobody lowered a jaw. SwamigaL continued: "You know what was the phala prApti that was given to them for such incessant atithi bhojana? Some years later, they celebrated their shashti apta pUrti (completion of
60 years of age). On a Maha Shivaratri day they sat for darshan of the four sessions of puja in the Kumbeswarar temple. When they returned home, that amma, who sat in the puja room complaining of exhaustion, stretched out and breathed her last. Shocked, the Chettiar called her
by name and went inside, but he too fell down and breathed his last. That was all. On that very day of Maha Shivaratri both of them attained the Shiva sAyujya together. Did you see the position that couple attained because of their act of incessant atithi bhojana?

Even now, on every Maha Shivaratri day, I would remember the couple. They are the couple who served food in such a lofty manner." AcharyaL finished.

Tears seeped from the eyes of those who heard the story.

The walking God stood up and said, "Seems it is almost two o' clock.Everyone will be hungry. Go inside and dine well", and bade them farewell with compassion.

மகா பெரியவா- 12

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.

எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

மகா பெரியவா- 11

மகா பெரியவாளின் - தெய்வத்தின் குரல்

விநாயகர்

”தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். "கோயில்" என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.

தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு
அருள் பாலித்து வருகிறார். அவரைப் "பிள்ளையார்" என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். "பிள்ளை" என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே "பிள்ளை" என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் "பிள்ளையார்" என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

"குமாரன்" என்றால் "பிள்ளை" என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் "குமரக் கடவுள்" என்கிறோம். ஆனால், அவரைக் "குமரனார்" என்பதில்லை: "குமரன்" என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

முதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஔவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஔவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஔவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான "விநாயகர்அகவலை"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும்.

இந்த ஔவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஔவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஔவை விக்சேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, "நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஔவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர்....

என்பதில் சொல்லாமல் சொல்கிறார். "அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஔவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர். தத்துவமயமான விநாயகர்

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து'
"உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து
அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று
என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம்
எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையும்' என்று சொன்னபோது தான் தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு 'ஸ்தூல காயர்' என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை. சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு.
குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கு கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளை யார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்' என்று காட்டுகிறார்.

ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக
ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது.

ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்: ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை .இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் "பிள்ளையார்" , என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது
மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும்
முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப்
பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

"தோர்பி: கர்ணம்" என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" ம்என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை
செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக “

மகா பெரியவா- 10

'Veedhi valam' in Nungambakkam. Every devotee wished to take Maha Periyava to their house and He was obliging too.

A small boy of 10-12years was watching it all.From his looks one could make out that he was very poor. He came as near to Maha Periyava as possible and said 'Sir, enga atthukkum vaango'. The sishyas tried to keep him away, but, every few steps he would come back with the request.

At the street corner the boy got scared that He might turn to the right and said 'Sir intha pakkam vaango,enga atthukku vandutu pongo'.Maha Periyava asked Kannan to lead the way to the boy's house. Maha Periyava entered the house, blessed everyone in the family and left.

Blessed was the family and I am sure that all of them would have become wonderful persons in their later lives. Enne Bagavaanin karunai.

மகா பெரியவா- 9

தீபாவளி தினம், ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.

"வேட்டி..." என்று இழுத்தான்,வண்டிக்காரன்.

பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு கொடு" என்றார்கள்.

சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.
"சம்சாரத்துக்குப் பொடவை..."

அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ஒரு புடவை கொண்டு வந்து கொடு" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள். சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.

பெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடவையையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.

பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும். புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். "பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.."

"கல்யாணப் புடவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா?"

"ஆமாம்,..கூறைப் புடவை, சம்பந்திக்குப் புடவை, பந்துக்களுக்குப் புடவைன்னு.. ஏகப்பட்ட புடவைகள்..."

"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடவையிலே ஒரு புடவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?"

தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.பெரியவாளே கேட்கிறா.. உயர்ந்த புடவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.

தொண்டரைக் கூப்பிட்டு, "அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா...." என்றார்கள்,பெரியவாள்.

"தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.

ஆமாம் அந்த அம்மையாரும்தான்!

Friday, March 23, 2012

மகா பெரியவா- 8

' un peru enna?'

'Kanyakumari'.

'un paatti perum athuthaan'. (the parents were taken by surprise at this).

' Kanyakumariyoda vishesham enna?'.

'Mookkuthi'.

'nee yen mookku kuthikkale?'.

' Maha Periyava sonna ippave kutthikaren'.

'kuthikko'.

She went out with her parents and was back soon, with her nose pierced.

A young man was standing at the back. Maha Periyava signaled him to come forward.

' ivala kalyanam panni karaya?'.

'Maha Periyava sonna ippave paani karen'.

'she is quite moderate looking' (so that the people around would not mistake HIM that HE is forcing the marriage)

'it does not matter. i have an aged mother and the girl, by obeying what YOU said immediately, proved that she is humble and simple. i agree to this marriage'.

Sri Maha Periyava Thiruvadigal Saranam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

மகா பெரியவா- 7

புதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு " அப்பா நாகு! நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ!" என்றார்.
"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா" என்றான் பவ்யமாக.
நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால....."ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்? சரி அப்பிடியே பண்ணு"
ராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை! அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா "பூணூல்" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச்! அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்? என்ன பண்ணுவது?
நேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 ! கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் "விஸ்வரூப" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம்!! ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான்! ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.
நான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான்! "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது! தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான்! எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்!!!
மிகுந்த வாத்சல்யத்துடன் "கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா! அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு! பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ?" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை! இவனுக்கோ ஒரே ஆச்சர்யம்! வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்!!
மறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரை!!ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு! அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். " என்னடா....நாகு! நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே!! என்ன தெரியணும்? கேளு..."
"அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா..........."
"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார்? அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே!......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே? இல்லியா பின்னே?"
"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா.........."
அவன் முடிப்பதற்குள் "ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து "மணி மூணரை " ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு?" கடகடவென்று சிரித்தார்.
"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது "பஸ்". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ்!! ஆச்சர்யப்படாதே!! மொத நாள் சரியா மூணரைக்கு நீ "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லி எழுப்பினேல்லியோ?.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு! அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் ! மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான்! மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன்! நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு!" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.
ஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே!! P for "Perfection " - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம்! நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்."

மகா பெரியவா- 6

எச்சில் தோஷம்

இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று .

ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கற்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே இருந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .

வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .

அப்போது மகான் ’நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே’ என்று கட்டளயிட்டார்

பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .

இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்றம் ? இக்காலஹஸ்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலத்தைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா

இதற்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்

Tuesday, January 24, 2012

Birth Day Greetings

25 Jan 2012

எங்கள் வாழ்க்கையை தென்றலாக மாற்ற பிறந்தவளே

எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற பிறந்தவளே

எங்கள் வாழ்க்கை கரும்பாய் தித்திக்க பிறந்தவளே

எல்லோர்க்கும் இனியவளாய் இருக்க பிறந்தவளே

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தன்னலம் கருதாது உதவி செய்வதை கடமையாக நினைத்து, உதவி மகிழ்ந்த ஒப்பற்ற உள்ளம் கொண்டவளாக பிறந்தவளே

எங்களுக்காகவே பிறந்தவளே

எங்கள் அருமை கிரிஜாவே/அம்மாவே/ பாட்டியே

உனக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


கிருஷ்ணன்,
சுதா, சந்தர்,
சுபா,மகேஷ்,
தனுஷ்,சுகோஷ்,மஹதி,தர்ஷிணி

Saturday, January 21, 2012

மகா பெரியவா- 5

21 Jan 2012

While admiring Maha Periavaa for what He did to the mankind, we should also know the ordeal he went thro in his early days as Sankaracharya.

Here, Brahmashree Musiri Dikshitar recounts the early days of our beloved Maha Periyava.


Thenambakkam, Biksha time: the young soft voice asks : 'vaazhaipazham illaya ?' a curt 'no'. 'has not come yet?'. an indifferent 'no' 'poovan pazham kooda illaya?' asks our Maha Periyava who is saakshath Parameswaran, who sees to that every single soul gets its food everyday.'not that too' comes the reply in an emotionless voice.

Aduthurai, Bhiksha time : 'has not the juice of lemon added to kosmalli?'. 'no' 'has it not come ?' 'no'. 'you can get it in the Aduthurai shandy'. 'a lot of crowd. no one has the time to go and buy it'.

Mutt : 'ugranathukku poi krambu vaaindu va' (for HIS toothache). the man in charge of the kitchen :'no, don't have it'. ' i am not asking for myself. it is for Accharya'. ' look, its not as if i have it and don't want to give it. as i said i don't really have it' says the dry voice.the devotee comes back and says it politely to Maha Periyava. In a quiet voice HE says 'go and ask in some of the houses around. some one will give'.

Brahmashree goes on to add 'if Mahalakshmi thaayar had known how much her son would struggle to get even a banana, a lemon.......what a heart break it would have been for her. what a sacrifice she did, for the benefit of millions of people like us and what she got in return (She would have always seen HIM as her son)

Well, this is what HE really went through when HE was in the teens when the mutt was not doing well financially. HE went through all that, did tapas, adhered to vrathas, sacrificed even the smallest of comforts and lived 100 years (and even after) to bless us all. BLESSED ARE WE. ( I am blessed too, to come back after a long gap and put up a post on HIM)

Sri Maha Periyava Thiruvadigal Saranam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

மகா பெரியவா - 4

21 ஜனவரி 2012

ஆஹா' என்று இருங்கள்

* பொழுது போக்கையே வாழ்க்கைப் போக்காக, அதிலும் வழுக்கிவிடுகிற போக்காக ஆக்கிக் கொள்ளாமல், எந்த அளவோடு ருசித்துவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டோ
இல்லாமல், "ஆஹா' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

* அதிகமாகப் பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான்.

* அனைவரும் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களும் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன சமூகத்துக்கும் நல்லது.

* வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு உணவு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் உணவே, தவிர ருசியைத் தீர்க்க அல்ல.

காஞ்சி மகா பெரியவா

மகா பெரியவா -3

21 ஜனவரி 2012

காஞ்சி மகன் பல விஷயங்களில் எடுத்த நடவடிக்கைகள் யாவும் நம்மை இப்போதும் பிரமிக்க வைக்கின்றன

ஒரு சமயம் ஆந்திராவில் இருந்து வந்த பல வித்வான்கள் பெரியவா முன்னாள் அமர்ந்திருந்தார்கள் அந்த வித்வான்கள் எல்லாரும் மெத்த படித்தவர்கள் தங்கள் சொல்லவேண்டியதை கணீரென்ற குரலில் சற்று உரக்கவே சொல்லுவார்கள்
ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்கள் அதுவும் தங்கள் கருத்துதான் ஏற்றுக்கொள்ளகூடியது என்று அடித்து சொல்லுவார்கள் . ஏறக்குறைய பதினைந்து பேர் ஞானநூல்களை பற்றிய விவாதம் - ஏறக்குறைய "பட்டி மன்றம்" போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இரு பகுதிகளாக பிரிந்து விவாதம் நடத்தினார்கள் பெரியவா அதை மிகவும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார் ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை எடுத்து சொல்லும்போது அது தான் சரி என்று நினைக்க தோன்றும்

எல்லாரும் பேசி ஒய்ந்தார்கள் இவ்வளவு நேரம் பொறுமையாக தாங்கள் பேசியதையெல்லாம் இந்த மகான் கேட்டுக்கொண்டிருந்தாரே இவர் என்ன சொல்லப்போகிறாரோ? என்று அவரது திருமுகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள் .
லேசாக புன்னகைத்தவாறு மகான் ஒரு சில வார்த்தைகளில் தனக்கே உரித்தான அந்த அமைதியான குரலில் சொல்லி முடித்தார்

அந்த சமயத்தில் மடத்தில் வேதம் பயின்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் மகானுக்கு பின்னால் நின்றுகொண்டு அவருக்கு விசிறிக்கொண்டிருந்தான் பெரியவா அந்த வார்த்தைகளை சொல்லக்கேட்ட அந்த மாணவன் "ஆஹா" என்று வாய்விட்டு சொல்லிவிட்டான் .

பெரியவா மெதுவாக அவனை திரும்பி பார்க்கின்றார் பிறகு பதில் ஏதும் பேசாமல் திரும்பிக்கொண்டார் , அதே சமயத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பண்டிதார்கள் யாவரும் எழுந்தனர் அதில் ஒருவர் மட்டும் "நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதற்கு மகா பெரியவா ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டீர்கள் அதனால் நாங்கள் பேசியதெல்லாம் தவறோ என்கிற ஐயம் எங்களுக்குள் எழுகின்றது இப்போது நாங்கள் புறப்பட்டு போய் நன்றாக விவாதித்த பிறகு நாளை பெரியவாளை வந்து சந்திக்கின்றோம் என்றார் .
வித்வான், மகானிடம் காட்டிய அடக்கம் பக்தி பூர்வமானது பெரியவா அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிவிட்டு அன்றைய நடை முறை பூஜைகளை எல்லாம் கவனிக்க ஆரம்பித்தார் எல்லாம் முடிய இரவு வெகு நேரமாகிவிட்டது பெரியவா படுத்துவிட்டார் ,ஆனால் தூங்க வில்லை

காலையில் எனக்கொரு பய்யன் விசிறிக்கொண்டு இருந்தானே அவனை கூப்பிடு என்று மடத்து சிப்பந்திக்குக் கட்டளையிட்டார்

அவன் அழைக்கப்பட்டான் இந்த நேரத்தில் மகான் தன்னை எதற்க்காக அழைக்கிறார் ? என்று அவன் வந்தான் வந்தவனிடம் பெரியவா கேட்டார்
"காத்தால சதஸ்ல என்ன சொன்னே"?
"நான் ஒன்னும் சொல்லலியே"
அவன் அழ ஆரம்பித்தான் பிறகு சுதாரித்துக்கொண்டான்
"நான் காலையில சதஸ்ல உட்கார்ந்தது இருந்தபோது வித்வான்கள் எல்லாம் பேசினா, பேச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் அவர்களுக்கு பதிலாக நான் நாலு வார்த்தை சொன்னேன் , அதை கேட்டுட்டு "நீ ஆஹான்னு சொன்னே இல்லையா"
"ஆமா"
"பெரிய வித்வத் சபைல ஜெயிக்ரவங்களும் கிடையாது , தோக்ரவங்களும் கிடையாது , விஷயங்களை எல்லாரும் கற்றுக் கொள்கிறார்கள்
இரு பக்கமும் பேசியதை வச்சுண்டு நான் நாலே வார்த்தைதான் சொன்னேன் "அப்போ நீ ஆஹான்னு சொன்னதால அவங்க பேசினது எல்லாம் தப்புங்கற மாதிரியும் , நான் பேசினது தான் சரிங்கற மாதிரியும் ஆகிறது இல்லையா? பெரிய வித்வத் சபைல இப்படியெல்லாம் பேசப்டாது தெரியுமா"

மாணவன் புரிந்துகொண்டான் மகானை வணங்கி விடை பெற்றான்

மகா பெரியவா -2

21 ஜனவரி 2012

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது ஓரிக்கையில் இருக்கும்போது சுந்தரராமன்(மடத்தில் பெரியவாளுக்கு சேவை செய்யும் சிறுவன் ), பூணூல் இல்லாமல் இருந்ததை மகான் கவனித்து விட்டார்.

நீ ஏன் இன்னும் உபநயனம் செய்து கொள்ளவில்லை?" என்று மகான் கேட்டார்.

"அதற்குத் தேவையான பணம் அப்பாவிடம் இல்லை போலிருக்கிறது" என்று சுந்தரராமன் சொல்ல, சில நிமிடங்கள் மகான் மௌனமாக இருந்துவிட்டு பிறகு ஒரு பிரசங்கமே செய்துவிட்டார் .

"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதிமுக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள். பட்டுப்புடவைகள், விருந்து, செலவு என்று பணத்தை வாரி வீணாக இறைக்கிறார்கள். இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி, பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளல் இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் . ஏழை ஜனங்கள் இதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான் கஷ்டம் வருகிறது. 'உபநயனம்' போன்ற சிறு விழாக்களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த சிறு தொகையே போதும். . திருமணம் நிச்சயமாகும்வரை கூட பிள்ளைகளுக்குப் பூணூல் போடுவதில்லை. கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக செலவுகள் செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள். வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு மகான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிறகு தொடர்ந்தார்:

"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துவா?, அதோடு உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா."

பஞ்சாங்கம் அவர் கையில் தரப்பட்டது சுந்தரராமன் தந்தையும் அங்கே வந்தார்

பஞ்சாங்கத்தை மிகவும் கவனித்த பெரியவா " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்றே உன் பையனின் உபனயனத்தை நடத்திவிடு என்று பணித்துவிட்டார்

தந்தை எதோ சொல்ல வாயெடுக்க

"பணம் இல்லை பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்லாதே, மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் உபனயனத்தை நடத்திவிடுவார் , மடத்து உக்ராணத்தில் தேவையான சாமான்கள் இருக்கின்றன நீ பய்யன் அவன் தாயார் தவிர வேறு யாரும் இந்த சுபகாரியத்திர்க்கு அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்


ஆனால் சுந்தரராமனின் தந்தை விடாப்பிடியாக "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம் செய்யவேண்டியுள்ளதே" என்று கூற, மகான் "அன்று நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யம் செய்யப்போகிறாய் அதே தினம் உன் குமாரனுக்கும் உபநயனம் செய்யப்போகிறாய்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்:

"உபநயனம் இதே இடத்தில் கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ்வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக்கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில் அங்கே உபநயன முகூர்த்தம் நடைபெறவேண்டும். இப்போது உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்

மகான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்? மேலும் சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர் அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும்

சுந்தரராமன் தான் தாயிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்த மாதரசி மகிழ்ச்சியடைந்தாலும் உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது.

ஒரு காலத்தில் பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைத்ததின் விளைவாகத்தான் அக்குடும்பத்திற்கு வறுமை நிலை வந்தது

அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை ஏதுமின்றி உபநயனம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் நடந்து கொண்டிருந்தத நேரம் ஒரு கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுடன் அங்கே வந்தார்கள். இருவர் கையிலும் இரண்டு தட்டுகள்.மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் . வந்தவர்கள் நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும் என்று இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் , அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே நிறுத்திவிட்டார் .

அதையெல்லாம் கவனித்த சுந்தரம் அய்யர் மெதுவான குரலில் பேசலானார் " மகா பெரியவா எங்களண்டை" நாளை காலை, எனக்கு மிகவும் பிரியமான ஒரு பையனுக்கு நான் இங்கே நடத்தும் பூணூல் கல்யாணத்திற்கு எனக்கு யார் உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் . நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து இருக்கிறீர்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டுவிட்டார்

" இது எங்களுக்கு கிடைத்த பாக்யம் என்ன செய்ய வேண்டும் என்று மகாபெரியவா சொன்னா செய்யக் காத்திருக்கிறோம்" என்று கூறினோம். " மகா பெரியவா புன்னகையோடு ஆசிவழங்கவே, கடைகள் மூடுவதற்கு முன்பே கடைவீதிக்கு சென்று கூடுமானவரை சாமான்களை சேகரித்து வந்தோம்" அவர் மேலும் சொன்னார்:" நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்" என்று. சுந்தராமனின் குடும்பத்தினர் முகம் மலர வெளியில் சொல்ல முடியாமல் பேசமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கா " தயவு செய்து இவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று அந்த தம்பதியர் மூங்கில் தட்டுகளை அவர்கள் முன் வைத்தார்கள் .

உபனயனத்திர்க்கு வேண்டிய புதிய துணிகள் மாலைகள் பழம் வெற்றிலைபாக்கு எல்லாமே அங்கு வந்தன , அதனால் மகான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் அதே நேரத்தில் சுந்தரராமனின் உபநயனமும் நடந்தது .

மகா பெரியவா முன்பு மடத்திலேயே உபநயனம் செய்துகொண்ட சுந்தரராமன் மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் வாழ்த்தினர் .

பூஜையை முடித்துக்கொண்ட மகானை, குடும்பமே கால்களில் விழுந்து நமஸ்கரிக்க, மகான் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்து சுந்தராமனின் கையில் கொடுக்க பிறகு சுந்தரராமனின் தாயாரைப் பார்த்து "உன் மகனின் பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்துவிட்டதா? என்று கேட்க, அந்த மாதரசியின் கண்களில் நீர் பெருக்கெடுக்க கைகள் உயர்ந்து மகானை வணங்கின. அன்று மடத்தில் எல்லோருக்கும் சிறப்பு சாப்பாடு

Friday, January 20, 2012

மகா பெரியவா- 1

20 Jan 2012


காஞ்சி மகா பெரியவர் ( சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகள் )பற்றி படிக்கும் போதெல்லாம் என் உடம்பு புல்லரிக்கிறது. அவரைப்பற்றி நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்...."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"..........

"மாட்டேன்......என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்!


.....மற்றொரு நிகழ்ச்சி தொடரும்

Thursday, November 24, 2011

நினைத்தேன் , எழுதுகிறேன்

25 11 2011

பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு – திருக்குறள்.

கணவனைப் பேணிக் காப்பதில் சிறப்புடையவளானால்,அவள் சுவர்க்கத்தில் பெறும் சிறப்பை இங்கேயே பெற்றுவிடுவாள் என்பதற்கேற்ப வாழ்ந்த என் கிரிஜாவே , நீ வாழ்ந்த போது, என்னை எல்லா விதத்திலும் மிக நன்றாக கவனித்துக்கொண்டாய். வீட்டுக்கவலை என்றால் என்ன என்று எனக்கு தெரியாதவாறு எல்லா பொறுப்புகளையும் செவ்வனே செய்து வந்தாய்.

நீ என்னை விட்டு பிரிந்த இந்த நாலு வருஷத்தில், வீட்டு பொறுப்புகளை நானே கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்த பின் தான் உன் அருமை எனக்கு தெரிய வந்தது என்பது இல்லை. ஆனால் நீ எவ்வளவு பெரிய சுமையை எவ்வளவு திறமையாக,எவ்வளவு அனாயாசமாக, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், 32 வருடங்கள் சுமந்து என் வாழ்க்கையை பிரகாசமாக ஆக்கினாய் !

கிரிஜா, நீ இல்லாமல் நான் வாடும் இந்த நிலையை ஆண்டவன் ஏன் எனக்கு கொடுத்தான் ? நம் குழந்தைகள் சுதா, சுபா, மாப்பிள்ளைகள் சந்தர்,மகேஷின் அன்பும்,ஆதரவும் நம் அருமை பேரன் பேத்திகள்,தனுஷ், சுகோஷ்,மஹதி,தர்ஷிணி இவர்களின் கொள்ளை பிரியமும்,மழலையும்,கொஞ்சலும் தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.

நீ இல்லாவிட்டாலும், நீ எப்போதும் என்னுடனேயே தான் இருக்கிறாய்.எப்போதும் இருப்பாய் .

Friday, August 12, 2011

Avaniavittam

13th Aug 2011

The significance of rituals during Avaniavittam

We usually start Avaniavittam with the recital of Kamo Karshia Mantra. There is not anyone in earth who has not sinned knowingly or unknowingly( manasa, vacha, karmana). Kamo Karshia mantra eliminates all types of sins and purifies us. Avaniavittam is not just a thread changing ceremony ; instead it is an unexplainable auspicious function. Only we the Brahmins get an opportunity every year to perform this holy ritual.

We conduct Kandarishi Tharpanam and Pithru Tharpanam to show our gratitude to our Devadas, Gurus, Navagrahas, our forefathers,all pitrugal and also all living things and nonliving things and Rishis who have given us the Upanishads and vedas , itihasa Puranas, Dharma Shastra , Ayurveda, Yoga ,Siddha, Vedic Mathematics etc.We do these Tharpanam not only to get their blessings but also for the good of the world.

Avaniavittam is followed by Maha Gayathri Jabam with pranayamam the next day, during when we acquire cosmic energy - the energy of the Universe and blessings from all devadas. It protects us from all diseases( mental and physical ) and all evils and also improves our health and gives us ability to have magnificent visions.


The Maha Sankalpam , the self introduction,is done before the sacred thread is changed. It tells the Deavadas, who is doing the pooja, where it is being done, nakshatram, month, date etc.,for what purpose it is being conducted, etc. According to our Mythology, there are 14 worlds like our earth in this universe. That is the reason the rishis introduced the detailed introduction. If you carefully observe, we realise how small we are in this universe. What we thought to be a big house or a big town will seem too small to even speak of. There is nothing to feel egoistic or proud about.
The Sankalpam is mainly to make our ego vanish and to make us feel humble and love everyone.

Coming to the Sankalpa Mantras, let us first understand the Hindu Cosmic cycle:
!
Mahayuga= Sum of 4 Yugas ( Krita, Treta, Dwapara and Kali ) = 4,320,000 Years

1000 Mahayugs = A kalpa and it is a daytime of Brahma

The Kalpa is ruled by 14 manus in succession. The reigning period of one manuvantra is 71.42 mahayugs ( 1000/14 )

There is equivalent night time of 4,320,000 Years.

The Day -night of Brahma constitutes one Brahma day ( 8.64 billion years ).

360 Brahma days constitute one Brahma year while 100 Brahma years represent the lifetime of Brahma which is the life of Cosmos.

Brahma is supposed to have completed 50 Brahma years and is in his 51st Year. That is why this period is called the Dviteeya parardhe - in the second half of Brahma's life.

We are presently in the Sveta- Varaha Kalpa in the reigning period of Vaivaswatha
-the 7th Manu.

The actual Sankalpa mantra and its meaning runs like this :

"dviteeya parardhe" - in the 2nd half of Brahma's life.

"Svetavaraha Kalpe "- in the Kalpa of Svetavaraha

"Vaivaswatha Manuvantare" - in the reigning period of Manu vaivaswatha

" Kaliyuge" - in this Kali yuga

"prathame padhe "- in the first quater of this yuga

"Jamboodveepe"- this denotes the place where the ritual is performed - India was known as Jamboodveepa

"Bharata Varshe, Bharata Kande "- in the land of Bharat

" Sakhade Mero , Dakshine Parsve"- to the south of Meru mountain,

"Asmin Varthamane Vyavaharike "- in the current period now reigning

Prabhavadi Shasti Samvatsaranam Madye"- among the cycle of 60 years starting from Prabhava

".....nama Samvatsare"- the name of the year in the 60 year Hindu calendar

".....Ayane"- Dakshinayane ( Aadi to Margazhi), Uttarayane ( Thai to Aani )

".....Ritou"- denotes the 6 seasons of rirus- Vasantha, Greeshma, Varsha, Sharadh, Hemantha and shisira

".....Mase" - the tamil month

".....Pakshe"- either Shukla Paksham or Krishna Paksham )

".....Subha Thithou"- one of the 15 days between Pournami and Amavasyaya - From Prathama to Pournami or Amavasya

".....vasara yuktayam"- the day of the week -from Bhanu ( Sunday) to sthira ( Saturday )

".....Nakshatra yuktayam"- the day's star or Nakshatram ( from Aswani to Revathi )


May God bless us all on this Auspicious Occasion of Avaniavittam


Sugavanam

Extracts from a handout given by Tamilnadu Brahmins Association , Tiruvanmiyur during the Avaniavittam function today.