எச்சில் தோஷம்
இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .
இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று .
ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கற்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே இருந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .
வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .
அப்போது மகான் ’நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே’ என்று கட்டளயிட்டார்
பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .
இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்றம் ? இக்காலஹஸ்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலத்தைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா
இதற்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்
Friday, March 23, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment