மகானிடம் மனக்குறையை சொல்ல பலர் இருந்தாலும் உடல் உபாதைக்கு மருந்தோ ஆறுதலோ தேடி வந்தவர்களும் இருந்தார்கள் .
டாக்டர் கெடு வைத்த பிறகும் கூட மகான் வில்வ இலைகள், துளசிதீர்த்தம் , வீபுதி பிரசாதங்கள் கொடுத்தும், சில பரிகாரங்கள் கூறியும் பிழைக்க வைத்த அதிசயங்கள் அனைவரும் அறிந்ததே .
ஒரு சிறுவன் உடம்பில் ஏற்பட்ட நோயைப் போக்க மகான் தாமும் விரதம் இருந்தார் எனும் செய்தியைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?
மகானின் மீது அளவுகடந்த பக்தி கொண்ட பக்தர் ஒருவர் தமக்கு எல்லாமே அவர் தான் என்று உறுதியாக இருந்தவர் மகானிடம் தன் மகனை அழைத்துகொந்து வந்தார்
மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி உடலில் பல பாகங்களில் இருந்து தோல் செதில் செதிலாக கீழே உதிர்கிறது டாக்டர்களிடம் மருந்து சாப்பிட்டும் பார்த்தாயிற்று நோய் குணமாகவில்லை சிறுவனை பார்ப்பவர்கள் அருவருப்புடனே அவனைப் பார்கிறார்கள்.
தந்தையிடம் விவரம் பூராவையும் தெரிந்து கொண்ட மகான் சிறுவனை தன் அருகில் அழைத்துப் பார்த்தார் பிறகு சிறுவனின் பெற்றோரிடம் பேசினார்:
"நீங்கள் இருவரும் மடத்திலேயே இரண்டு மூணுநாள் தங்குங்கோ, பையன் மட்டும் என்னோட இருக்கட்டும் நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பையனைத் தேடி என்னண்டை வரப்படாது" என்று உத்தரவிட்டு மடத்து சிப்பந்திகளிடம் தேவையான விவரங்களையும் சொல்லிவிட்டார். மூன்று தினங்கள் சிறுவன் மகானுடன் தான் இருந்தான். அவனுக்கு தினமும் மூன்று வேளையும் வழைத்தண்டுச்சாறு கொடுக்கப்பட்டது. வேறு ஆகாரம் ஏதும் இல்லை.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் மகானும் அந்த மூன்று நாளும் வாழைத்தண்டு சாறுதான் உட்கொண்டார். வேறு ஆகாரமில்லை. சிறுவனின் உடலில் இருந்து சருமம் செதில் செதிலாக உதிர்வது நின்று விட்டது. அவன் உடல் தேறி விட்டதை மகான் சொல்லித்தான் பெற்றோர்களுக்கே தெரியும். மகானை எழுந்து வணங்கிவிட்டு தங்கர் மகனை அழைத்துக் கொண்டு போனார்கள் .
மகான் வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் என்பதை அறிய இதைவிட வேறு என்னவேண்டும்
Sunday, April 01, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment